தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

வாய்க்காலில் முளைத்துள்ள ஆகாய தாமரைகள்

அரியலூர் அய்யன் ஏரி அருகே சித்தேரி வரத்து வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் ஆங்காங்கே ஏராமான ஆகாய தாமரைகள் வளர்ந்துள்ளது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரத்து வாய்க்காலில் முளைத்துள்ள ஆகாய தாமரைகளை சீரமைத்து தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அரியலூர்.

குப்பை மேடாக மாறிவரும் சுடுகாடு

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் இரும்புலிக்குறிச்சியில் சிறுகடம்பூர் சாலையில் ஆதிதிராவிட மக்களுக்கு சொந்தமான சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டில் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், ஓட்டல்களில் வீணான உணவு அதிகளவில் கொட்டி வருகின்றனர். இதனால் சுடுகாடு குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், இரும்புலிக்குறிச்சி.

பஸ் வசதி வேண்டும்

அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து திட்டக்குடி வரை 10-ம் எண் கொண்ட அரசு பஸ் திட்டக்குடி, பெண்ணாடம் ஆர்.எஸ். மாத்தூர் வழியாக செந்துறை வரை கடந்த காலங்களில் இயக்கப் பட்டு வந்தது. இதனால் கல்லூரி, பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பயன் அடைந்து வந்தனர். இந்தநிலையில் தற்போது பஸ் இயக்கப்படாததால் அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மீண்டும் நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராவணன், மாத்தூர்

நாய்களால் தொந்தரவு

அரியலூர் அரண்மனை தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அரியலூர்.

கால்நடைகளால் தொல்லை

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரத்தில் படுத்து கொள்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. இதனால் சிலர் படுகாயம் அடைந்தும் வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மீன்சுருட்டி.


Next Story