தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ளது அரக்கட்டளை கிராமம். இங்கிருந்து கடம்பூர் வரை செல்லும் 2 கிலோமீட்டர் நீளமுள்ள குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் நடந்து செல்வோர் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அரக்கட்டளை.

சேறும், சகதியுமான சாலை

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், விளந்தை ஜே.ஜே.நகர் பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் முன்பு உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவிகள் நடந்து செல்வே லாயகற்ற நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், விளந்தை.

அனுமதியின்றி நடைபெறும் டாஸ்மாக் பார்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் மதனத்தூர் சாலையில் துணை மின்நிலையம் உள்ளது. இதன் அருகே அனுமதியின்றி 24 மணி நேரமும் டாஸ்மாக் பார் நடைபெற்று வருகிறது. இங்கு குடிமகன்கள் குடித்து விட்டு சாலையில் பாட்டில்களை உடைத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி வழியாக நடந்து பொதுமக்கள், விவசாயிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் சமூக விரோத செயல்களும் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தா.பழூர்.

போக்குவரத்து நெரிசல்

அரியலூர் மார்க்கெட் பகுதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் முன்பு ஏராளமான பொருட்களை வைத்து ஆக்கிரமித்து செய்துள்ளனர். மேலும் கடைகளின் முன்பு ஆங்காங்கே ஏராளமான சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாலையை மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிேறாம்.

பொதுமக்கள், அரியலூர்.

நாய்கள் தொல்லை

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் சாலைகளில் வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், செந்துறை.


Next Story