தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

தெருநாய்கள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு தெரு நாய்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. மேலும் வாகனங்களில் செல்வோரை பின்னால் துரத்தில் சென்று கடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வி.களத்தூர்.

மது பிரியர்களால் தொந்தரவு

பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள பெரிய ஏரிக்கரையில் இரவு நேரத்தில் மது பிரியர்கள் ஒன்றாக அமர்ந்து மது குடிக்கின்றனர். மேலும் அவர்கள் குடி போதையில் சாலையில் செல்பவர்களிடம் தொந்தரவில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த சாலை வழியாக தனியாக பெண்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே ஏரி கரை பகுதியில் யாரும் மது குடிக்க விடாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரம்பலூர்

இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்

பெரம்பலூரில், புறவழிச்சாலையில் கோனேரி பாளையம்-ஆலம்பாடி இடையே இறைச்சி-மீன் கழிவுகள் ஓட்டல் மற்றும் வீடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் சாலை ஓரத்தில் கொட்டப்படுகிறது.இதனால் சுற்றுப்புற சூழல் சீர்கேடு அடைவதுடன்,இறைச்சி கழிவுகளை நாய்கள் இழுத்துச் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது.பெரம்பலூர் புறவழிச்சாலையில் இறைச்சி கழிவுகள்,குப்பை மாசுக்களை கொட்டுவதை தடுக்கவும்,குப்பைகளை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்கவும் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள்,கோனேரிபாளையம்.

சுகாதார சீர்கேடு

பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் அருகே புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்குள்ள சென்னை பஸ் நிறுத்தம் அருகே காலியாக இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தில் இரவு நேரங்களில் பலர் சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்ட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

தடையின்றி கிடைக்கும் புகையிலை பொருட்கள்

பெரம்பலூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சில கடைகளில் மறைத்து வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தடையின்றி புகையிலை பொருட்கள் கிடைத்து வருவதால், அதனை பயன்படுத்துவோர் தொடர்ந்து பயன்படுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


Next Story