நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு


நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
x

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி உறுதி மொழியை வாசிக்க, அனைத்துத் துறை அலுவலர்களும் திரும்பக்கூறி உறுதி மொழி ஏற்றனர். நான் சாதி, இனம், வட்டார மதம் அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று கூறி உறுதி மொழி ஏற்றனர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஷ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், மோகனகுமரன், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், கலால் உதவி ஆணையர் பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சரஸ்வதி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story