நந்தீஸ்வரர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்


நந்தீஸ்வரர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
x

நந்தீஸ்வரர் கோவில் குளத்தில் இருந்த ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த நந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் நந்தீஸ்வரர் கோவில் எதிரே உள்ள கோவில் குளம் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த குளத்தில் அதிக அளவில் மீன்கள் இருந்தது. நேற்று காலை குளத்தில் இருந்த ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. மேலும் துர்நாற்றம் வீசியது. இதனால் சாமி கும்பிட சென்ற பக்தர்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். மீன்கள் செத்து மிதக்கும் குளத்தில் அந்த பகுதியை சேர்ந்த சில சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தனர்.‌ அப்போது சிறுவர்கள் குளத்தில் செத்து கிடந்த மீன்களை கரைமேல் வீசி விளையாடிக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

நந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான குளம் தண்ணீர் நிரம்பி காணப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் குளத்தில் உள்ள நீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது. அதில் இருந்த மீன்களும் செத்து மிதக்கிறது. இதற்கு முக்கிய காரணம் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் நீர் மாசடைந்து அதில் உள்ள மீன்களும் செத்து விடுகிறது. எனவே குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story