துறைமங்கலம் பெரிய ஏரியில் செத்து மிதந்த மீன்கள்


துறைமங்கலம் பெரிய ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
x

துறைமங்கலம் பெரிய ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.

பெரம்பலூர்

செத்து மிதந்த மீன்கள்

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து நேற்று துர் நாற்றம் வீசியது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள் ஏரிக்கு சென்று பார்த்த போது மீன்கள் செத்து மிதந்து ஆங்காங்கே கரை ஒதுங்கி காணப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி நிர்வாகத்தினர், வருவாய்த்துறையினர் ஏரிக்கு சென்று செத்து மிதந்த மீன்களை பார்வையிட்டனர். அப்போது அவர்கள் கடும் வெயிலினால் மீன்கள் செத்திருக்கலாம் என்றனர். ஆனால் பொதுமக்கள் தரப்பில் கழிவுநீர் ஏரியில் கலப்பதால் அல்லது யாரேனும் ஏரி தண்ணீரில் மருந்தை கலக்கியதால் மீன்கள் செத்திருக்கலாம் என்று குற்றம் சாட்டினர்.

நடவடிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்பே இருந்து மீன்கள் செத்து மிதந்திருக்கலாம், அந்த அளவுக்கு செத்து மிதந்த மீன்களின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டன. ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தண்ணீர் வற்றும் போது ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், சீமைக்கருவேல மரங்களையும் அகற்றி, குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு ஏரியை ஆழப்படுத்தி, கழிவுநீர் கலக்காமல் தூய்மையாக வைத்திருக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story