அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு; சுதந்திரதின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு; சுதந்திரதின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்.

இதனை தொடர்ந்து உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

1.7.2022 முதல் அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 34 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என அறிவித்தார்.


Next Story