ஓகேனக்கல் அருகேகாவிரி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவுகிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள்


ஓகேனக்கல் அருகேகாவிரி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவுகிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 23 July 2023 1:00 AM IST (Updated: 23 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

ஓகேனக்கல் அருகே மாறுகொட்டாய் பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி கிருஷ்ணகிரியை சேர்ந்த 2 வாலிபர்கள் இறந்தனர்.

ஊராட்சி மன்ற தலைவரின் மகன்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரஜினி. அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவரது மகன் சபரீஷ் (வயது26). இவர் தனது நண்பர் அஜித் (24) உள்பட 12 பேருடன் 2 காரில் மாதேஸ்வரன் மலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் பாலாறு வழியாக ஒகேனக்கல் மாறுகொட்டாய்க்கு வந்தனர். பின்னர் அவர்கள் கர்நாடகா மாறுகொட்டாய் சின்ன மணல்மேடு காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது சபரீஷ், அஜித் ஆகியோர் காவிரி ஆற்றில் நீந்தி சென்றபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

உடல்கள் மீட்பு

இதுகுறித்து அவர்கள் கர்நாடக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர், விரைந்து வந்து மாறுகொட்டாய் பரிசல் ஓட்டிகள் உதவியுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரையும் தேடினர். ஆனால் சபரீஷ், அஜித் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து பரிசல் ஓட்டிகள் 2 பேரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாதேஸ்வரன் மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story