பாப்பாரப்பட்டி அருகேகிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவுதுணி துவைக்க சென்றபோது பரிதாபம்
பாப்பாரப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி இறந்தார்.
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே துணி துவைக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் விழுந்து சாவு
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பெரிய கம்மாளப்பட்டியை சேர்ந்தவர் சின்னமாதன். இவரது மனைவி செவத்தாள் (வயது 80). கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் மூதாட்டி தனது மகன் மாதையனுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் துணி துவைப்பதற்காக மூதாட்டி அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றார். அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மூதாட்டியின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் மூதாட்டியின் உடல் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மூதாட்டி இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.