பெரும்பாலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி தொழிலாளி சாவு


பெரும்பாலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 28 Jun 2023 1:00 AM IST (Updated: 28 Jun 2023 1:23 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

ஏரியூர்:

பெரும்பாலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள காவக்காடு மேல் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் அய்யண்ணன் (வயது55), சுப்பிரமணி (55). தொழிலாளர்கள். இவர்கள் மோட்டார் சைக்கிளில் பெரும்பாலையில் இருந்து ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது கெண்டேயனஅள்ளியை சேர்ந்த ரத்னவேல், முத்துமணி ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் மேச்சேரியில் இருந்து பெரும்பாலை நோக்கி வந்தனர்.

பெரும்பாலை பாரதி நகர் பகுதியில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அய்யண்ணன், சுப்பிரமணி, ரத்னவேல் முத்துமணி ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story