அரசு பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
சாத்தான்குளம் அருகே அரசு பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
தட்டார்மடம்;
பாளையங்கோட்டை சாந்திநகர் திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் இன்பராஜ் (வயது 59). அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் நெல்லையில் இருந்து சாத்தான்குளம் நோக்கி பஸ்சை ஓட்டி வந்தார். சாத்தான்குளம் அருகே உள்ள புளியங்குளம் பஸ்நிறுத்தம் பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் மதுபோதையில் பஸ்சை வழிமறித்து இன்பராஜிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கருங்கடல் மேல பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த சூசை மகன் ராஜா சிங் (38), பழனியப்பபுரம் பகுதியைச் சேர்ந்த காந்திராஜ் மகன் துரைசிங் (46) ஆகிய இருவரும் மதுபோதையில் அரசு பஸ்சை வழிமறித்து தகராறு செய்தது தெரியவந்தது. இதையடுத்து
சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன், உதவி ஆய்வாளர் திரு. ரத்தினராஜ் மற்றும் போலீசார் மேற்படி எதிரிகளான ராஜா சிங் மற்றும் துரைசிங் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேற்படி எதிரி ராஜா சிங் மீது ஏற்கனவே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது