ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்; 4 வாலிபர்கள் கைது


ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்; 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்; 4 வாலிபர்கள் கைது

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலத்தை அடுத்த ராயர்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பழனியாபிள்ளை(வயது 49). ராயர்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரான இவர் கடந்த 12-ந் தேதி கிராமத்தை சுற்றி பார்த்தபோது சிறுவத்தூர் செல்லும் சாலையில் உள்ள குடிநீர் குழாயை அதேபகுதியை சேர்ந்த கொளஞ்சி மகன் மணிவேல்(வயது 25), மாயவன் மகன் மணிவேல்(22), பழனி மகன் சிவானந்தம்(25), வேல்முருகன் மகன் இலங்கேஸ்வரன்(25) ஆகிய 4 பேரும் உடைத்துக்கொண்டிருந்ததை பார்த்து அவர்களிடம் தட்டிக்கேட்டபோது அவரை அவர்கள் ஆபாசமாக திட்டியுள்ளனர்.

இதேபோல் மற்றொரு இடத்திலும் மேற்படி நபர்கள் குடிநீர் குழாயை உடைத்துக்கொண்டிருந்ததை பார்த்த பழனியாபிள்ளை இதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்போவதாக கூறிவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் அன்று இரவு 10 மணியளவில் மேற்படி 4 பேரும் ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டிற்கு சென்று அவரையும், அவரது மனைவியையும் ஆபாசமாக திட்டி, கதவை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பழனியாபிள்ளை கொடுத்த புகாரின் பேரில் மணிவேல் உள்பட 4 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.


Next Story