போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
செஞ்சியில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்
செஞ்சி,
செஞ்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் தண்டபாணி. இவர் நேற்று காலை போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது கொங்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னராஜ் (வயது 29) என்பவர் அங்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்த போலீஸ்காரர் தண்டபாணியிடம், ஒரு வழக்கு தொடர்பாக எனக்கு வேண்டியவரை போலீஸ் நிலையத்தில் பிடித்து வைத்துள்ளீர்கள். எனவே அவரை உடனே வெளியே அனுப்புங்கள் என்று கூறியதாக தெரிகிறது. அவ்வாறு செய்யவில்லையென்றால் உங்களை பற்றி சமூகவலைத்தளங்களில் தவறாக பதிவிடுவேன் என்று கூறியதோடு, அவருக்கு சின்னராஜ் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சின்னராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story