முதல்-அமைச்சர் குறித்து அவதூறு: பா.ஜனதா கவுன்சிலர் கைது


முதல்-அமைச்சர் குறித்து அவதூறு: பா.ஜனதா கவுன்சிலர் கைது
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய பா.ஜனதா கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.

குமரி,

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருபவர் சுபாஷ் (வயது 32). இவர் பா.ஜனதா மாவட்ட ஐ.டி. பிாிவு நிர்வாகியாக உள்ளார். இவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான வீடியோவை சமூக வலைத்தளமான முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தி.மு.க. வக்கீல் கோடீஸ்வரன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story