கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் பழுதாகி நின்ற ரெயில் - பயணிகள் அவதி
திருவள்ளூர் அருகே பழுதாகி நின்ற ரெயிலால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
சென்னை
அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி நேற்று மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் ரெயில் நிலையத்திற்கு வரும்போது திடீரென கோளாறு ஏற்பட்டது.
இதனால் மின்சார ரெயில் கடம்பத்தூர் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. அதன் பின்னால் வந்த ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன. இதனையடுத்து ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சரி செய்தனர்.
பழுது சரி செய்யப்பட்ட பின்னர் கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை மார்க்கத்திற்கு அந்த ரெயில் புறப்பட்டது. பின்னால் நின்று கொண்டிருந்த ரெயில்கள் அதன் பின்னர் இயக்கப்பட்டது.
என்ஜின் பழுது காரணமாக ரெயில் நிறுத்தப்பட்டதால் ரெயில் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story