சிக்கன் ரைஸ் வர தாமதம்.. கடையில் இருந்தவர்களை கத்தியால் தாக்க முயன்ற சிறுவன் உட்பட 5 பேர் கைது
பெரம்பூரில் சிக்கன் ரைஸ் வர தாமதமானதால் கடையில் இருந்த நபர்களை தாக்க முயன்ற சிறுவன் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை பெரம்பூர் மதுரை சாமி மடம் தெருவில் இருக்கும் பாஸ்புட் கடைக்கு சென்ற 5 பேர் கும்பல், சிக்கன் ரைஸ் வர தாமதமானதால் கடையில் இருந்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவர்களை கத்தியால் வெட்டவும் முயன்றுள்ளது.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் கார்த்திக் அளித்த புகாரின் பேரில், கடையில் தகராறு செய்த நான்கு நபர்களையும், 17வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.
சிறுவன் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்ட நிலையில், மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story