ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்


ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
x

ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் ஆலங்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மாநில தலைவர் வாலண்டினா, மாவட்ட செயலாளர் சுசிலா, மாவட்ட தலைவர் பாண்டிச்செல்வி, ஒன்றிய செயலாளர் சோபனா, பொருளாளர் நதியா, துணைச்செயலாளர் கோமதி, துணை தலைவர் லதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். குடும்ப அட்டையில் என்.பி.எச்.எம். என்ற குறியீடு உள்ள அட்டையை பி.எச்.எச். ஆக மாற்றிட வேண்டும். முதியோர் மற்றும் விதவை உதவி தொகையை வழங்கிட வேண்டும். அனைத்து ஊராட்சியிலும் பாரபட்சமின்றி குடிநீர் வழங்கிட வேண்டும். அனைத்து ஊராட்சியிலும் சாலை மற்றும் தெருவிளக்கை சரிபார்த்து சீர்படுத்திட வேண்டும். 100 நாள் வேலை கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனே வேலை அட்டையை வழங்கிட வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாகவும், தினக்கூலி ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் ஆலங்குடி சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் (பொறுப்பு) ராஜேஸ்வரியிடம் மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்டு தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story