தர்மபுரியில்திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில்திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 July 2023 1:00 AM IST (Updated: 16 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு திராவிடர் கழகத்தின் இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், நிர்வாகிகள் தமிழ்ச்செல்வி, சிவாஜி, கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு தொடர்ந்து பறிக்கப்பட்டு வரும் நிலையை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளில் வேலை வாய்ப்பு பெற மாநில மொழி அறிவு கட்டாயம் என்ற விதியை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உறுதி செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திராவிடர் கழக மாநில மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story