தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புசுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புசுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 July 2023 1:00 AM IST (Updated: 25 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர் நல சங்க மாநில பொதுச்செயலாளர் சேரலாதன், கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேன்மொழி, மாதம்மாள், காமாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகம் முழுவதும் 1,800-க்கும் மேற்பட்ட சுகாதார செவிலியர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிபந்தனையின்றி நிரப்பிட வேண்டும். ஆன்லைன் மாற்று ஏற்பாடுகளை செய்திட வேண்டும். கள பணிகளை மேற்கொள்ள இலவச மடிக்கணினிகளை வழங்க வேண்டும் 80 லிட்டர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் ஏராளமான சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story