தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்திதர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்திதர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 July 2023 1:00 AM IST (Updated: 25 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்மபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராசன், மாவட்ட செயலாளர் சேகர், ஜாக்டோ ஜியோ மாவட்ட நிதிகாப்பாளர் புகழேந்தி மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கல்பனா, வெங்கடேசன், மகேஸ்வரி, காவேரி, சண்முகம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். மணிப்பூர் மாநிலத்தில் பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடும் கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

காலமுறை ஊதியம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்குபவர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள், வன பாதுகாப்பு ஊழியர்கள் கல்வித்துறையில் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சங்க நிர்வாகிகள், உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story