தர்மபுரியில்சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில்சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2023 1:00 AM IST (Updated: 26 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் உள்ள மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட துணைத்தலைவர் முரளி தலைமை தாங்கினார். மாநிலச்செயலாளர் நாகராசன், மாவட்ட செயலாளர் ஜீவா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மோட்டார் தொழிலாளர்கள் நலவாரிய செயல்பாட்டை சீர்படுத்தவேண்டும். நலவாரியத்தில் தொழிலாளர்களை சேர்ப்பதற்கான இணையதள பதிவு முறையை மேம்படுத்த வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நலவாரியங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

காலதாமதம் இன்றி...

அமைப்பு சாரா நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு வகையான உதவிகளை காலதாமதம் இன்றி குறிப்பிட்ட காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நல வாரியத்தின் மூலமாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் கலாவதி, நாகராஜன் மாவட்ட நிர்வாகிகள் ஹானஸ்ட்ராஜ், அங்கம்மாள், ஜெயராமன், லெனின், மகேந்திரன், சண்முகம்மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story