தர்மபுரியில்கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில்கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2023 1:00 AM IST (Updated: 26 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

அரசு கலைக்கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், தர்மபுரி கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தகுதி உள்ள கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். யு.ஜி.சி. நிர்ணயித்துள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். பணி அனுபவ காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் செயல்படும் அரசு கல்லூரிகளை சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story