ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ள அனுமந்தகுடியில் இந்து-முஸ்லிம்- கிறிஸ்தவ கூட்டமைப்பு, உழைக்கும் விவசாயிகள் சங்கம், மற்றும் புரட்சிகர இளைஞர் கழகம் ஆகியவை இணைந்து மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு துரைராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்து- முஸ்லிம்-கிறிஸ்தவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும், மணிப்பூரில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்தும், மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் சம்பவத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.. இதில் பேராசிரியர் கோச்சடை, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த நாகராஜன், வக்கீல் கணேசன், சிம்சன், சந்தனமேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story