தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புதொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உயர்மட்ட குழு உறுப்பினர் காமராஜ் தலைமை தாங்கினார்.
இதில் நிர்வாகிகள் சாமிநாதன், சென்னகேசவன், கேசவன், சிவக்குமார், ராஜராஜன், திருநாவுக்கரசு, சிவக்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பி.எட். பயிற்சி மாணவர்களை கொண்டு மதிப்பீடு செய்வதை கைவிட வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். எமிஸ் பணியில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர்.