நிலஅளவை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் நிலஅளவை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்
நில அளவை துறையில் காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்தப்பட்ட நிரந்தர பணியாளர்களான புல உதவியாளர் பணியிடங்களை தனியார் மூலம் அத்து கூலிக்கு நியமித்து கொள்ளலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் சசிகலா தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சுபாஷ் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் நில அளவை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story