தர்மபுரியில்நகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில்நகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2023 1:00 AM IST (Updated: 6 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் நகராட்சி பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் நகராட்சி பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தர்மபுரி நகராட்சி அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவசங்கர், மாவட்ட பொருளாளர் இளங்கோவன், மாவட்ட அமைப்பு ஆலோசகர் ராஜரத்தினம், மாவட்ட அமைப்பு செயலாளர் சுசீந்திரன் ஆகியோர் கோரிக்கைகளைற வலியுறுத்தி பேசினர்.

நகராட்சி பணியாளர்களுக்கு மாத கடைசி நாளில் சம்பளம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்கள் என அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல், பதவி உயர்வு மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும்.

பதவி உயர்வு

எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். நகர சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளில் பண பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் சரவணகுமார், கோவிந்தராஜ், தண்டபாணி, வெங்கட்ரமணி, மாவட்ட துணைச்செயலாளர்கள் வினோத்குமார், கோபால், நாகராஜ், மாது, மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் கலைவாணி, அர்ச்சனா, மாவட்ட பிரசார செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story