திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதை தடை செய்யும் மத்திய அரசின் விதிமுறையை கண்டித்து நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குமார் வரவேற்று பேசினார்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இளங்கோ, தலைமை அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் சண்முகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் இந்திய கணசங்கம் கட்சி தலைவர் முத்துசாமி உள்ளிட்டோர் பேசினர். முடிவில் குமாரபாளையம் நகர தலைவர் சரவணன் நன்றி கூறினார்.


Next Story