தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில், இஸ்ரேல் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குவதாகவும், அந்த நாட்டை கண்டித்தும் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அலாவுதீன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முகமது அலி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் மைனுதீன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story