அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் இளவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன் கோரிக்கையை விளக்கி பேசினார்.
இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் இளங்கோவன், கோட்ட செயலாளர் ஷிரிதர், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜானகி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story