கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

கால அவகாசம் இல்லாமல் புள்ளி விவரங்களை கோருவதை கண்டித்தும், தினசரி காணொலி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடத்துவது மற்றும் விடுமுறை நாட்களில் ஓய்வு இல்லாதது போன்ற பதிவாளரின் செயல்பாடுகளை கண்டித்தும் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இணை செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத், செயலாளர் முருகேசன், துணை தலைவர் இளவேந்தன், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர்கள் சங்க மாநில துணை தலைவர் இளங்கோவன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் கலைசெல்வன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அனைத்து பணிநிலை பதவி உயர்வு முன்மொழிவுகளை இதுவரை கோராததை கண்டித்தும், துணை பதிவாளர் பதவி உயர்வில் வெளிப்படை தன்மை இல்லை என கூறியும் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சுகன்யா நன்றி கூறினார்.


Next Story