சிறுவன் மர்மச்சாவு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

சிறுவன் மர்மச்சாவு  சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
x

திட்டுவிளை பகுதியில் சிறுவன் மர்மச்சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

திட்டுவிளை பகுதியில் சிறுவன் மர்மச்சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திட்டுவிளை பகுதியில் சிறுவன் ஆதில் முகமது மர்மமான முறையில் இறந்து கிடந்தான். இதுதொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி குமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திட்டுவிளை பஸ்நிலையம் அருகில் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமை தாங்கினார். தோவாளை ஒன்றிய செயலாளர் ஜான் அசூன் வரவேற்று பேசினார். இதில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பகலவன், வக்கீல் ஜெகன், பூதப்பாண்டி பேரூராட்சி துணைத்தலைவர் அனில்குமார், தாஸ் மற்றும் பலர் பேசினர்.

Next Story