மின்வாரிய ஓய்வுபெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் மின்வாரிய ஓய்வுபெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சின்னுசாமி தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் காளியப்பன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் குப்புசாமி, இளங்கோவன், கருப்பன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 3 சதவீத அகவிலைப்படியை நிலுவையுடன் உடனடியாக வழங்க வேண்டும். மின்வாரியம் பொதுத்துறையாக நீடிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்திட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் நிபந்தனைகளை அகற்றி, அனைத்து வித மருத்துவ செலவுகளையும் காப்பீட்டு நிறுவனமே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கூடுதல் ஓய்வூதியம் தொடர்பாக தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.