உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி துறைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட தலைவர் அசோகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்த தொழிலாளி மற்றும் சுய உதவி குழுக்கள் என்ற பெயரால் உழைப்பை சுரண்டுவதை கைவிட வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் ஆபரேட்டர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட உதவி செயலாளர்கள் சுரேஷ், சிவராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, தெரசா, கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story