எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை பாசிச எதிர்ப்பு தினமாக அறிவித்து தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் நஜீர், மாவட்ட சமூக ஊடக அணி தலைவர் தாஹிர், செயலாளர் ஆசிக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் காதர் உசேன் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில பொருளாளர் ஹசன் பாபு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக், ஐக்கிய ஜமாத் பேரவை மாவட்ட தலைவர் தவுலத்கான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, ஆதி தமிழர் பேரவை, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

இதில் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் மத்திய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story