மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

அரசு பள்ளிகளில் படித்து வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்காக 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் சிறப்பு பயிற்றுனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் குமார், பொருளாளர் ஸ்டெல்லா அருணா, இயன்முறை மருத்துவர்கள் சங்க தலைவர் கவியரசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 2001-ம் ஆண்டு வழங்காமல் உள்ள பணி ஆணையை உடனே வழங்க வேண்டும். பணிச்சலுகைகள் வழங்க வேண்டும். 4 ஆண்டுகளாக ஊதியம் உயர்த்தபடவில்லை. அதை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story