டாஸ்மாக் குடோன் கூலித்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் குடோன் கூலித்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் டாஸ்மாக் குடோன் கூலித்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

நாமக்கல் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் கூலி உயர்வு கேட்டு டாஸ்மாக் குடோன் முன்பு கூலித்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் குடோன் கூலித்தொழிலாளர்கள் சங்கத்தின் கிளைத் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் லிகர் பெட்டிக்கு ரூ.2.50-ம், பீர் பெட்டிக்கு ரூ.4-ம் கூடுதல் கூலியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க கிளை செயலாளர் முனியப்பன், பொருளாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story