இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்
குமாரபாளையம்
பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விளை நிலங்கள் வீட்டு மனைகளாக பிரித்து விற்பனையை செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கள்ளங்காட்டு வலசு வாய்க்கால் பாலம் அருகில் நடைபெற்றது. இதற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அர்த்தனாரி தலைமை தாங்கினார். துணை செயலாளர் சுப்பிரமணி, நிர்வாகிகள் பாலதண்டாயுதம், சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல் மோகன், மாவட்ட செயலாளர் அன்புமணி, வக்கீல் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரை ஆற்றி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story