கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

பள்ளிபாளையத்தில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பொங்கல் பரிசு தொகுப்பு

பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு விவசாயிகள் பயிரிட்டு சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் பொங்கல் பரிசுடன் கரும்பு இடம்பெற்று வந்த நிலையில் அரசு பொங்கல் பரிசு வழங்கும் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆவத்திபாளையம் பஸ் நிறுத்தம் முன்பு சமயசங்கிலி- செங்குட்டைபாளையம் களியனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பயிரிட்ட கரும்பு விவசாயிகள் பொங்கல் பரிசுடன் கரும்பும் சேர்த்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கரும்புகளுடன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனால் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலபரப்பில் கரும்பு பயிரிட்டுள்ளதாகவும், தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்காவிட்டால் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் தனியார் சர்க்கரை ஆலைக்கு விற்கும்போது அடிமட்ட விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கரும்பு விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.

இழப்பீடு

எனவே தமிழக அரசு கரும்பு விவசாயிகளின் நலன் கருதி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கரும்பு விவசாயிகளிடம் அரசு கரும்பு பெறவில்லையெனில் 1 ஏக்கருக்கு ரூ.3 லட்ச இழப்பீடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு முன்னதாக கரும்புகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக செல்ல புறப்பட்ட கரும்பு விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story