மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் ஆவரங்காடு எம்.ஜி.ஆர். சிலை அருகே பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளிபாளையத்தில் உள்ள சட்டவிரோத சந்து மது கடைகளை தடுத்து நிறுத்த வேண்டும், ஆவரங்காடு அரசு மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்து, அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, கூடுதல் மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், மருந்து கொடுப்பவர் போன்றவர்களை நியமித்து, கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அரசு கிருஷ்ணவேணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச் சுவரை உயர்த்தி, கண்காணிப்பு கேமரா வசதி செய்து கொடுக்க வேண்டும். 17-வது வார்டு பகுதியில் 30-ஆண்டுகளாக உள்ள சாக்கடை கால்வாயை அகற்றி புதிய சாக்கடை கால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும். பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் கூடுதல் காவலர்களை பணியமர்த்தி, வாகன திருட்டு, பணம், நகை திருட்டு உள்ளிட்ட திருட்டுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி ஒன்றிய செயலாளர் ரவி, விசைத்தறி சங்க ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லட்சுமணன், பள்ளிபாளையம் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் நவீன், கட்சி மாவட்ட குழு உறுப்பினர் கோவிந்தராஜ் நகர கிளை தோழர்கள் சரவணன், சங்கர், ரங்கராஜ், அசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story