அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்

நாமக்கல் நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கி பேசினார். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஆட்கள் குறைப்பு நடவடிக்கை என்ற பெயரில் நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்களை பாதிக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் இளவேந்தன், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நில அளவை துறை அலுவலர்கள், சங்க நிர்வாகி ஆசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story