நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பாளையங்கோட்டையில் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகர் நகராட்சி வழி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகராட்சி உள்ளிட்ட 20 மாநகராட்சிகளில் நிரந்தர பணியாளர்களின் எண்ணிக்கையை 90 சதவீதம் குறைத்தும், தனியார் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும் அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்துக்கு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில செயலாளர் ஐவன் தலைமை தாங்கினார். மாநகராட்சி பொறியாளர் சங்க நிர்வாகி விவேகானந்தன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் வெங்கடேசன், ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மோகன், பொதுச் செயலாளர் மாரியப்பன், மருத்துவத் துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கனகராஜ், மாநகராட்சி வருவாய் உதவியாளர் சங்கம் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஊழியர் ஒருவர் மண்ணை வாரி தூற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story