தூத்துக்குடி வக்கீல் கொலை சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி வக்கீல் கொலை சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடி வக்கீல் கொலை சம்பவத்தை கண்டித்து நாமக்கல்லில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே வக்கீல் முத்துக்குமார் (வயது45) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று பல்வேறு இடங்களில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பரமத்தி என மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் இரா.அய்யாவு தலைமை தாங்கினார். இதில் சிவில் வக்கீல்கள் சங்க தலைவர் பிரபாகரன் மற்றும் சங்க நிர்வாகிகள், மூத்த வக்கீல்கள் கே.கே.பாலசுப்பிரமணியம், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story