மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எலச்சிபாளையம்
காரல் மார்க்ஸ் குறித்து கவர்னர் ரவி அவதூறாக பேசியுள்ளதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திருச்செங்கோடு நகர ஒன்றிய குழுக்களின் சார்பில் அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். தொடர்ந்து நகர செயலாளர் ராயப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வேலாயுதம், மாவட்ட செயலாளர் சேகரன், மாவட்ட குழு உறுப்பினர் ஆதிநாராயணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சியம் குறித்து அத்தூறாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாட்டில் கவர்னராக ரவி பதவியேற்றதிலிருந்து மாநில அரசையும், ஜனநாயக இயக்கங்களையும் எதிராக பேசி வருகிறார் உள்பட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நகர்க்குழு உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.