விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

மல்லசமுத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

எலச்சிபாளையம்

மல்லசமுத்திரம் பி.டி.ஓ. அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகி பாண்டியன், பாலையா தலைமை தாங்கினார். இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இந்தியா முழுவதும் 15 கோடி பேர் அட்டை வைத்துள்ளனர். இப்பணியாளர்களுக்கு ரூ.2.74 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் வெறும் ரூ.60 ஆயிரம் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 60 வயது பூர்த்தி அடைந்த விவசாய தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் கூட்டுக் குடும்பமாக வாழும் குடும்பங்களை கணக்கெடுப்பு செய்து, அவர்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் தலைவர் ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அன்புமணி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story