கிராம கோவில் பூசாரிகள் பேரவையினர் ஆர்ப்பாட்டம்


கிராம கோவில் பூசாரிகள் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் கிராம கோவில் பூசாரிகள் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பூசாரிகளுக்கும் மாத சம்பளம் வழங்க வேண்டும். செயல்படாமல் முடங்கி கிடக்கும் கிராம கோவில் பூசாரிகள் நலவாரியத்தை சீர்படுத்தி, விரைவாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் செல்வராசு தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டணமில்லாத மின்சாரம் வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

1 More update

Next Story