வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

வருவாய்த்துறையை சிறப்பு துறையாக அறிவித்து மேம்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியலை 2019-ம் ஆண்டு முதல் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது அடிப்படை பணியாளர் காலி பணியிடங்கள் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிபந்தனை இன்றி உடனடியாக நிரப்பிட வேண்டும். கட்டுபாடில்லாத செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

1 More update

Next Story