காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளிபாளையம்
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில்காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி.க்கு 2 ஆண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் மாநில சூரத் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி பள்ளிபாளையம் நகர காங்கிரஸ் கட்சியினர் பள்ளிபாளையம் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பெஞ்சமின், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் மோகன் வரவேற்பு உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேவராஜ், தங்கவேல், கோவிந்தராஜ், சம்பத், ஆறுமுகம், கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






