தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ராசிபுரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

ராசிபுரம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பள்ளி ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தினை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் முருக செல்வராசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், கல்வித்துறை உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.


Next Story