மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x

வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் அடுத்துள்ளது அரூர், ஆண்டாபுரம், பரளி, வளையப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பகுதியில் தமிழக அரசு சிப்காட் தொழில்பேட்டை அமைக்க ஆணை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், தின்னை பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வளையப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். கொ.ம.தே.க. மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானோர் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி சிப்காட்டை விவசாய விளை நிலங்களில் அமைக்ககூடாது என கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story