விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

காரிமங்கலத்தில் விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி

காரிமங்கலம்

காரிமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்பின் வட தமிழக இணை செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். இதில் சேலம் கோட்ட பொறுப்பாளர் சாந்தகுமார், மாவட்ட தலைவர் ரகு மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள், பா.ஜனதா நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கேத்தனஅள்ளி ஊராட்சியில் இந்து கோவில் கட்டுவதற்கு தடை ஏற்படுத்தும் வருவாய்த்துறை அலுவலர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story